சிறைக்குள் சில திகில் சம்பவங்கள்.. ஆர்ஜே பாலாஜியின் 'சொர்க்கவாசல்' டீசர்..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

ஆர். ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் ஒரு நிமிடத்திற்கும் மேல் இருக்கும் இந்த டீசரில் சிறையில் சில குற்ற சம்பவங்கள் நடப்பதும், ரத்தக்களரியான அந்த சிறைச்சாலையில் ஆர். ஜே. பாலாஜி இருப்பதுமான காட்சிகள் உள்ளன. குறிப்பாக, செல்வராகவன் கத்தியை எடுத்து ஆட்டை வெட்டுவது போல் வெட்டும் திரில் காட்சியும் இந்த டீசரில் உள்ளதைப் பார்க்கும்போது, இந்த படம் முழுக்க முழுக்க ஒரு திரில் கதை அம்சம் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் பாலாஜி சக்திவேல், அந்தோணி தாசன், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சித்தார்த் விசுவநாத் என்பவர் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசையில், பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன் நடிப்புக்கும் தீனி போடும் வகையில் கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

4 கண்கள் பேசும்போது வார்த்தைக்கு என்ன வேலை.. சூர்யாவின் 'கங்குவா' சிங்கிள் பாடல்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த பாடலின் சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி

'கட்டம் கட்டி கலக்குறோம்': சிம்பு அடுத்த படத்தின் அட்டகாசமான போஸ்டர்..!

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் அந்த படத்தின் அறிவிப்பு அட்டகாசமான போஸ்டர்

துலாம் முதல் மீனம் வரை ராசிகளுக்கான மாத பலன்கள் - ஆதித்ய குருஜி

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான ஆன்மீக ஜோதிட பலன்கள்

எல்லாத்துக்கும் விஜய் சேதுபதி தான் காரணமா? அர்னவ் இன்ஸ்டா போஸ்ட்டால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்னவ் வெளியேறிய நிலையில், அவர் வெளியேறும் போது அவரை நக்கலாக விஜய் சேதுபதி பேசியதும், அர்னவ்  பேசிய சில விஷயங்களை அவர் கண்டித்ததையும்

நடிகை கவுதமிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி: திரையுலகினர் வாழ்த்து..!

நடிகை கவுதமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு முக்கிய பதவியை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.