முதல் நாளை விட 2வது நாளில் அதிகம்.. வசூலை குவிக்கும் 'சிங்கப்பூர் சலூன்'

  • IndiaGlitz, [Saturday,January 27 2024]

ஆர்ஜே பாலாஜி நடித்த 'சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அனைத்து தரப்பினரும் குறிப்பாக இளைஞர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள் என்றும் இதனால் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகமாக வந்திருப்பதாகவும் விநியோகிஸ்தர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த படம் கூடுதல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸ்கள் திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆர்ஜே பாலாஜி தேர்வு செய்த கதை அனைத்து வயதினருக்கும் பொருத்தமான கதையாக இருப்பதால் வார இறுதி வசூல் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்றும் ஒரு விடுமுறை தினத்திற்கான முழு திருப்தி அளிக்கும் படமாக இந்த படம் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

ஆரே பாலாஜி ஏற்கனவே ’எல்கேஜி’ ’மூக்குத்தி அம்மன்’ ‘வீட்ல விசேஷம்’ ‘ரன் பேபி ரன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த நிலையில் அவருடைய வெற்றி பட வரிசையில் இந்த ’சிங்கப்பூர் சலூன்’ படமும் இணைந்துள்ளதாக கருதப்படுகிறது.

More News

பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்லும் புஸ்ஸி ஆனந்த்.. விஜய்யின் அடுத்த கட்ட திட்டம்..!

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியே வந்துள்ளதை அடுத்து விஜய்யின் அடுத்த திட்டம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.  

சென்னை வந்தது பவதாரிணி உடல்.. பண்ணைபுரத்திற்கு எடுத்து செல்லப்படுகிறதா?

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் சற்று முன் இலங்கையிலிருந்து சென்னை வந்ததாகவும் சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணி: ஏஆர் ரஹ்மான் இரங்கல்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை காலமான நிலையில் அவரது மறைவுக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் இந்த பிரபலங்கள் தான் வில்லனா? மாஸ் தகவல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் 63 வது திரைப்படத்தின்  ஆரம்ப கட்ட பணிகள்

எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன்.. பவதாரிணி மறைவு குறித்து விஷால்

கடந்த சில வாரங்களாக எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன், இது வாழ்க்கை மீதான என்  தவறான புரிதலை உணர்த்துகிறது என நடிகர் விஷால், பாடகி பவதாரிணி மறைவு குறித்து பதிவு செய்துள்ளார். அவர் மேலும்