ஆர்ஜே பாலாஜியின் முதல் முயற்சி.. ஃபர்ஸ்ட்லுக்- டைட்டில் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ’எல்கேஜி’, ’மூக்குத்தி அம்மன்’ மற்றும் ’வீட்ல விசேஷம்’ ஆகிய திரைப்படங்கள் காமெடி மற்றும் ஜனரஞ்சக படமாக உருவாகி நிலையில் முதல் முறையாக அவர் திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.
ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜியன் கிருஷ்ண குமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பதும் மதன் படத்தொகுப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’ரன் பேபி ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன பின்னர் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய மூன்று படங்களும் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
My first thriller ??
— RJ Balaji (@RJ_Balaji) December 14, 2022
#RunBabyRun ??
In theatres from February 2023 ! pic.twitter.com/jOpgWBw63Y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com