close
Choose your channels

ஆர்ஜே பாலாஜியின் 'மூக்குத்தி அம்மன்' 2ஆம் பாகத்தின் டைட்டில் இதுவா? நயனுக்கு பதில் யார்?

Wednesday, June 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதை பார்த்தோம் .

மேலும் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகத்தின் டைட்டில் ’மாசாணி அம்மன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் த்ரிஷா அம்மன் வேடத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் இந்த படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவில்லை என்றும் இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment