தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Monday,February 11 2019]

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் ரிலிசுக்கு தயாராகி ஒருசில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் காத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்ததால் இம்மாதம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 22 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு....! என அறிவித்து 'பிப்ரவரி 22ல் இந்த படம் ரிலீஸ் என்ற் வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். மேயாத மான் படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். 

More News

உலகின் முதல்  4K HDR டிரைலரை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்

'மூடர் கூடம்' படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் நடித்து இயக்கியிருக்கும் அடுத்த படமான 'அலாவுதினின் அற்புத விளக்கு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

சூர்யாவின் 'காப்பான்' ரிலீஸ் குறித்த தகவல்

சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் படமான 'காப்பான்'

'பொதுநலன் கருதி' இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு கருணாகரன் விளக்கம்

சமீபத்தில் வெளியான 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் சீயோன், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கருணாகரன், தனக்கும் தயாரிப்பாளருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக

தேர்தலில் போட்டியிட விரும்பும் மறைந்த சூப்பர் ஸ்டாரின் மனைவி

கன்னட சூப்பர் ஸ்டார் அம்பரீஷ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் ஜொலித்த அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில்

'அருவி' நாயகி அதிதிபாலன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று 'அருவி'. மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய வசூலை பெற்று வெற்றி அடைய