ஆர்.ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Saturday,February 02 2019]

காமெடி நடிகரான ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'எல்.கே.ஜி. திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹிட்டாகியுள்ள 'எத்தனை காலம் தாம் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே' என்ற பாட்டின் பின்னணியில் வெளியாகியுள்ள இந்த டிரைலரில் ரூ.3000 கோடி செலவில் சிலை, தெர்மாகூல் விவகாரம், மனுஷனை விட மாட்டுக்கு அதிக பாதுகாப்பு, என மாநில, தேசிய அரசியல் என ஒன்றையும் விட்டுவைக்காமல் கலாய்க்கப்பட்டுள்ளது.

தலைவர் இறந்தவுடன் அழுவது போல் சீன் போடுவது, திடீரென வரும் நடிகருக்கு குவியும் கூட்டம், 100 நாள் ஷோ செய்துவிட்டு சிஎம் ஆக ஆசைப்படுவது போன்ற காட்சிகள் பல நிஜ நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறது.

வந்தேறி, பச்சைத்தமிழன் மற்றும் தமிழரான அஸ்வின் விக்கெட் எடுத்தால் இந்திய வீரர் என்று சொல்வதும் ராமேஸ்வரம் மீனவர்கள் சுடப்பட்டால் தமிழக மீனவர்கள் என்று சொல்வதும் ஏன்? போன்ற வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

மொத்தத்தில் இந்த படத்தை எந்த அரசியல்வாதியாவது பிரச்சனை செய்து இலவச விளம்பரம் செய்தால் சூப்பர் ஹிட்டாக வாய்ப்பு உள்ளது. இதுவரை பெரிய நடிகர்களின் படங்களுடன் மட்டுமே மோதிவந்த அரசியல்வாதிகள் ஆர்ஜே பாலாஜியுடன் மோதுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'SK 13' பர்ஸ்ட்லுக் இதுதான்

சிவகார்த்திகேயனின் 13வது படமான SK 13' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

என்.ஜி.கே டீசரை கொண்டாடும் 5 மாநில சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஆர்யா, சிம்பு படங்களை இயக்குவேன்: சந்தானம்

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் வரும் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

'லட்சுமி' பட நடிகர் மீது பாலியல் புகார்

'வாண்டட்', 'ABCD', ரத்த சரித்திரா, உள்பட பல பாலிவுட் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த சல்மான் யூசூப் கான், மீது பாலியல் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தங்கை கேரக்டரில் யூடியூப் பிரபலம்?

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' மற்றும் நடித்து தயாரித்த 'கனா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில்