அஜித்தை மறைமுகமாக தாக்குகிறாரா ஆர்ஜே பாலாஜி? சர்ச்சை டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கிய ’வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில் இந்த படம் ஜூன் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’பதாய் ஹோ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையின்படி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஒரு பெண்ணை காதலித்த நிலையில் அதை வீட்டில் சொல்ல முற்படும் போது திடீரென அவருடைய அம்மா கர்ப்பம் என்று தெரியவருகிறது. இதனால் அக்கம் பக்கத்தாரிடம் வரும் கேலி கிண்டல்கள், தனது அம்மா கர்ப்பம் என காதலியிடம் சொல்ல முடியாத நிலை, காதலிக்கு தெரிந்தவுடன் அவருடைய ரியாக்சன் என படம் முழுவதும் ஒரு குடும்பத்தில் நடக்கும் விஷயத்தை காமெடி கலந்து சொல்லப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து ரசிகர் ஒருவர் கூறியபோது, ‘சர்ச்சைக்குரிய கதை, தமிழகத்தில் இந்த கதையை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை’ என பதிவு செய்திருந்தார். அதற்கு பதில் கூறிய ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆமா !!! Familyல ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story, But hero rowdy, don, கொலைகாரன், திருடன், smugglerஆ நடிச்சா family subject படம் !!! என்று கூறியிருந்தார்.
ஆர்ஜே பாலாஜியின் இந்த டுவிட்டுக்கு கமெண்ட்ஸ் பகுதியில் பலர் அவர் மறைமுகமாக அஜித்தை தாக்கியதாக பதிவு செய்து வருகின்றனர். ரவுடி கேரக்டரில் வேதாளம், டான் மற்றும் கொலைகாரன் கேரக்டரில் பில்லா, திருடன் கேரக்டரில் மங்காத்தா படத்திலும் அஜித் தான் நடித்திருக்கின்றார் என்றும் எனவே அஜித்தை தான் ஆர்ஜே பாலாஜி மறைமுகமாக கூறுவதாகவும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
ஆனால் அப்படி பார்த்தால் சிவாஜி முதல் அனைத்து நடிகர்களும் மேற்கண்ட கேரக்டர்களில் நடித்து உள்ளதால் அஜித்தை மட்டும் குறிவைத்து ஆர்ஜே பாலாஜி சொல்ல வாய்ப்பில்லை என நடுநிலை ரசிகர்களும் இந்த கருத்தை மறுத்து வருகின்றனர். மொத்தத்தில் ஆர்ஜே பாலாஜியின் இந்த ட்விட் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது என்று மட்டும் தெரிகிறது.
ஆமா !!! Familyல ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story, But hero rowdy, don, கொலைகாரன், திருடன், smugglerஆ நடிச்சா family subject படம் !!!???????????? https://t.co/0Sqge0eXAh
— RJ Balaji (@RJ_Balaji) March 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments