போராட்டம் முடிந்தது. தயவுசெய்து வீட்டுக்கு செல்லுங்கள். மாணவர்களுக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

கடந்த ஒரு வாரமாக அமைதியாக நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டம் துரதிஷ்டவசமாக வன்முறையாக மாறிவிட்டது. இதுவரை இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தவர்கள் அனைவரும் தற்போது போராட்டத்தை முடித்து கொண்டு அமைதியாக வீடு திரும்புங்கள் என்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஆர்ஜே பாலாஜி சற்றுமுன் மாணவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். என்னை பொறுத்தவரையில் இந்த போராட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நம்முடைய கோரிக்கையை ஏற்று அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. எனவே நாம் வெற்றி பெற்றுவிட்டதால் போராட்டத்தை நிறுத்திக்கொள்வதுதான் முறை.

நேற்று வரை அமைதியாக போராடிய மாணவர்கள் இன்று வன்முறையில் ஏன் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. வன்முறையில் இறங்கியது மாணவர்களா? அல்லது வேறு யாரேனுமா? என்பதும் புரியவில்லை., இந்த போராட்டம் வெற்றியடைய முக்கிய காரணம் போலீஸ் நம்மை நடத்திய கண்ணியமான விதம் தான். அரசும் உடனடியாக நம்முடைய கோரிக்கையை டெல்லி வரை கொண்டு சென்று சட்டம் இயற்றியுள்ளனர். எனவே உடனடியாக இப்போதைக்கு கலைந்து வீடு செல்லுங்கள் மாணவர்களே.. அதைவிடுத்து வன்முறையில் இறங்குவது தவறான செயல். அதை மாணவர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

More News

இது வீரத்தை காட்டும் நேரம் அல்ல. மாணவர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

கடந்த ஒரு வாரமாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி தனது வீட்டின் முன் இரவுபகல் பாராது அமைதியாக சிம்பு போராடினார் என்பதும் அனைவரும் அறிந்ததே...

இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய நாள். புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே. ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

கடந்த ஒரு வாரமாக அறவழியில், அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வன்முறை பக்கம் திரும்பிவிட்டது. மாணவர்கள் என்ற போர்வையில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் நுழைந்ததே இந்த வன்முறைக்கு காரணம் என போலீசார் உள்பட பொதுமக்கள் பலர் கூறி வருகின்றனர்...

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் தீவைப்பு. காரணம் யார்?

சென்னையில் மாணவர்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீஸார் நிறுத்தி வரும் நிலையில் ஒருசில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது...

பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜி.வி.பிரகாஷ்-ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை மெரீனாவில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் ஒருசில இடங்களில் போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இதனால் மெரீனா உள்பட சென்னையின் ஒருசில பகுதிகளில் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது...

என் இதயம் மெரீனாவில்தான் உள்ளது. மருத்துவமனையில் இருந்து ராகவா லாரன்ஸ் தகவல்

சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்பட பல வசதிகளை தனது சொந்த செலவில் செய்து கொடுத்தார்...