போராட்டம் முடிந்தது. தயவுசெய்து வீட்டுக்கு செல்லுங்கள். மாணவர்களுக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஒரு வாரமாக அமைதியாக நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டம் துரதிஷ்டவசமாக வன்முறையாக மாறிவிட்டது. இதுவரை இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தவர்கள் அனைவரும் தற்போது போராட்டத்தை முடித்து கொண்டு அமைதியாக வீடு திரும்புங்கள் என்று கூறி வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஆர்ஜே பாலாஜி சற்றுமுன் மாணவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். என்னை பொறுத்தவரையில் இந்த போராட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நம்முடைய கோரிக்கையை ஏற்று அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. எனவே நாம் வெற்றி பெற்றுவிட்டதால் போராட்டத்தை நிறுத்திக்கொள்வதுதான் முறை.
நேற்று வரை அமைதியாக போராடிய மாணவர்கள் இன்று வன்முறையில் ஏன் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. வன்முறையில் இறங்கியது மாணவர்களா? அல்லது வேறு யாரேனுமா? என்பதும் புரியவில்லை., இந்த போராட்டம் வெற்றியடைய முக்கிய காரணம் போலீஸ் நம்மை நடத்திய கண்ணியமான விதம் தான். அரசும் உடனடியாக நம்முடைய கோரிக்கையை டெல்லி வரை கொண்டு சென்று சட்டம் இயற்றியுள்ளனர். எனவே உடனடியாக இப்போதைக்கு கலைந்து வீடு செல்லுங்கள் மாணவர்களே.. அதைவிடுத்து வன்முறையில் இறங்குவது தவறான செயல். அதை மாணவர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
The protest is over.Plz stop this. pic.twitter.com/VlPX5dpy9m
— RJ Balaji (@RJ_Balaji) January 23, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com