உதயநிதி கேட்ட அதே கேள்வியை கேட்ட ஆர்.ஜே.பாலாஜி
- IndiaGlitz, [Thursday,April 19 2018]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடிய அரசியல் கட்சிகள் மற்றும் ஒருசில திரையுலகினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். எனவே நாளைய போட்டி உள்பட சென்னையில் நடக்கவிருந்த அனைத்து போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் நிர்மலாதேவி, கவர்னர், எச்.ராஜா போன்ற செய்திகளின் பரபரப்பில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் போராட்டங்களை மறந்துவிட்டன. இந்த நிலையில் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து நாளை முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் நேற்று நடிகர் உதயநிதி, ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே' என்று தனது டுவிட்டரில் கூறினார்.
இதே கருத்தை இன்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் கூறியுள்ளார். அவர் கூறியதாவ்து: திரையுலகின் வேலை நிறுத்தத்துக்குப் பின்னர் நிறைய நல்ல மாற்றங்களுடன் சினிமாத்துறை மறுபடியும் வந்துள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான தினசரி சம்பளக்காரர்கள், தன்னுடயை குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை உரிய நேரத்தில் கட்ட முடியும். இந்த நல்ல தீர்வை அடைவதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.
அதேசமயம், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்களா? இரண்டு தவறுகள் ஒரு நல்ல விஷயத்துக்குத் தீர்வாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தவறை ஏற்றுக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்' என்று கூறியுள்ளார்.
— RJ Balaji (@RJ_Balaji) April 19, 2018