close
Choose your channels

நயன்தாராவை கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஆர்ஜே பாலாஜி

Monday, March 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அச்சு அசலாக அம்மன் போலவே நயன்தாரா இருப்பதாக பலர் கமெண்ட் அடித்தனர். இருப்பினும் ஒருசிலர் நயன்தாரா, அம்மன் கேரக்டரில் நடிப்பதா? என கேலி செய்தனர் 

இந்த நிலையில் டுவிட்டர் பயனாளிகளில் ஒருவர் இது குறித்து கூறிய போது ’யாரு அம்மன் வேடம் போடனும்கிற கூறுபாடு இல்லாம போச்சு இந்த கூமுட்டைகளுக்கு’என்று பதிவு செய்திருந்தார். துரைராஜ் என்ற அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஆர்ஜே பாலாஜி ’உங்க பேர்ல இருக்குற கடவுள் தான் உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் 

முன்னதாக இந்த படத்தில் நயன்தாரா கமிட்டானது பற்றி ஆர்ஜே பாலாஜி கூறியபோது ’இந்த கதையை எழுதும்போது நயன்தாராவை நினைத்து எழுதவில்லை என்றும் கதையை எழுதி முடித்தவுடன் ஒரு பிரபலமான, வலிமையான நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என தான் கருதியதால் அதன் பின்னர் நயன்தாராவை அணுகியதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment