அமெரிக்க தேர்தலும் மூக்குத்தி அம்மனும்: ஆர்ஜே பாலாஜியின் வித்தியாசமான விளம்பரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் அவர்களும் வெற்றி பெற்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோபைடனுக்கும், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்கவிருக்கும் கமலா ஹாரீஸ் அவர்களுக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆகியோர்களும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ’மூக்குத்தி அம்மன்’ துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துக்கள் என பதிவு செய்துள்ளார். மேலும் மூக்குத்தி அம்மன் அவர்கள் இருக்கும் ஆசி வழங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். ஆர்ஜே பாலாஜியின் இந்த விளம்பர யுக்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.
மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி ஓடிடியில் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#MookuthiAmman துணையால் வெற்றிப் பெற்ற American president and Vice President ku வாழ்த்துக்கள்..! ?????????????????? pic.twitter.com/bCwldOM8CZ
— RJ Balaji (@RJ_Balaji) November 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com