பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்ஜே அர்ச்சனா இல்லை: உறுதி செய்த புகைப்படம்

இன்று தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். அந்த வகையில் ஆர்ஜே அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் பணி செய்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் அதனால் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஆர்ஜே அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் குடும்பத்தோடு சுற்றுலா சென்று இருப்பதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆர்ஜே அர்ச்சனா தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டதால் இன்று ஆரம்பிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் அவர் வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

View this post on Instagram

Holiday mode with family :-)

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on Oct 3, 2020 at 10:14pm PDT