ஏங்க இவ்வளவு வன்மத்தோட வாழுறீங்க.. பிக்பாஸ் போட்டியாளர் கேட்ட ஆவேசமான கேள்வி..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், முதல் வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும், தினமும் சில புரமோ வீடியோக்கள் வெளியாகி, அன்றைய எபிசோடு எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், சற்று முன் இன்றைய 10வது நாளின் முதல் புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ’டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து ஆனந்தியை விட நான் பெஸ்ட் என்று நினைக்கிறேன். அதேபோல் விஷாலை விட ஒரு படி நான் மேல், முதலிடத்திற்கு தகுதியானவன் என்று நினைக்கிறேன் என்று முத்துக்குமார் கூறுகிறார்.

இதனை அடுத்து பேசும் விஷால், என்னுடைய பெஸ்ட்டை நான் கொடுத்திருக்கிறேன், எனக்கு இந்த ஃபர்ஸ்ட் பொசிஷன் வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார். இதை அடுத்து பேசும் ஆனந்தி, “இவங்க இரண்டு பேர் பக்கத்துல ஆர் ஜே ஆனந்தியாக இல்லாமல் ஒரு ஹீரோவா இருப்பதற்கு ஒரு எக்ஸ்ட்ரா முயற்சியை நான் போட்டு இருக்கிறேன். எனவே நான் தான் ஒரு சிஇஓவாக இருப்பதற்கு தகுதி என நினைக்கிறேன்’ என்று கூறுகிறார்.

ஒரு சிஇஓவாக இருப்பதற்கு அவர்கள் எப்படி முயற்சி எடுத்தாங்களோ’என்று முத்துக்குமார் கூற, அதற்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஏன் எதிர்த்து பேசக்கூடாது என்று செல்கிறீர்கள்? எதற்காக இப்படி சொல்கிறீர்கள்?” உங்களுடைய பேவரிசத்தை தயவு செய்து காட்ட வேண்டாம். ஏன் இவ்வளவு வன்மையாக வாழ்கிறீர்கள்?” என்று முத்துக்குமார் கூறுகிறார்.

இதனை அடுத்து, சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், இன்றைய டாஸ்க்கின் முதல் இடத்தை ஆர்ஜே ஆனந்தி, முத்துக்குமார் மற்றும் விஷால், இவர்களில் யார் பெறுகிறார்கள் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

More News

கால்பந்து போட்டியை ரசித்து பார்க்கும் அஜித்.. அவரே எடுத்த செல்பி வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் லண்டனில் கால்பந்து போட்டியை ரசித்து பார்க்கும் செல்பி வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகியின் மகன்.. எந்த ஹீரோ படம்?

பிரபல பாடகியின் மகன் தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தெறிக்கவிடும் ஆக்சனில் சமந்தா.. சிட்டாடல்: ஹனி ஃபன்னி வெப்சீரிஸ் டிரைலர்..!

நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள சிட்டாடல் என்ற வெப்தொடர் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி இந்த தொடர் அமேசன்

'தளபதி 69' படத்தில் விஜய்யின் கேரக்டர் இதுவா? இன்னொரு தீரனை எதிர்பார்க்கலாமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக

'ப' வரிசை படங்களின் இயக்குனர் பீம்சிங் 100வது பிறந்த நாள்: பிரபு நெகிழ்ச்சி பதிவு..!

தமிழ் சினிமாவில் 'ப' என்ற எழுத்தில் தொடங்கும் பல படங்களை இயக்கியவர் பீம்சிங் என்பதும், இவர் சிவாஜி கணேசனை வைத்து மட்டும் பல படங்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.