திடீரென தூய்மையான கங்கை நீர்: எஸ்.ஆர்.பிரபு சுட்டிக்காட்டிய கட்டுரை

கங்கை தண்ணீரை தூய்மை செய்ய சமீபத்தில் மத்திய அரசு 7 ஆயிரம் கோடி செலவு செய்யும் என அறிவித்தது. அதுமட்டுமின்றி முதல்கட்டமாக 220 கோடி ஒதுக்கீடு செய்து கங்கையை தூய்மைப்படுத்தும் பணியையும் தொடங்கியது. ஆனால் இந்த பணி தொடங்கிய போதிலும் கங்கைநீர் தூய்மையை பெற்றதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் குளிப்பதற்கு கூட அந்த தண்ணீர் உகந்ததல்ல என சுற்றுச்சூழல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது கங்கைநீர் ஓரளவுக்கு சுத்தமாக இருப்பதாகவும் குளிப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து சுத்தம் செய்ய முடியாத கங்கை நீர், ஒரு சில நாட்களில் தொழிற்சாலைகளை மூடியதால் தூய்மையானது என்றால், கங்கை நீரில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதே காரணம் அசுத்தத்திற்கு காரணம்என்பது தற்போது தெரிய வருகிறது.

கங்கை மட்டுமன்றி இந்தியாவிலுள்ள பல நதிகளும் தற்போது முன்பை விட அதிகமாக தூய்மையாக இருப்பதாகவும் இதனை அடுத்து மத்திய அரசு இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டிய பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்னர் இதுகுறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

More News

நாளை விளக்குகளை அணைத்தால் மின்கட்டமைப்பு பழுதாகுமா?  மத்திய அரசு விளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாட்டு மக்களிடம் உரையாடியபோது ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிறு இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்குகளை

டார்ச்லைட் இருந்தால் போதுமா, பேட்டரி வேண்டாமா? கமல்ஹாசனை கலாய்த்த பாஜக பிரமுகர்

உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'பிரதமர் விளக்கேற்ற சொன்னது குறித்து கூறியபோது

இசைக்காக 288 நாட்கள் பட்டிணிப்போராட்டம்!!! கோரிக்கை நிறைவேறாமலே உயிர்பிரிந்த அவலம்!!!

துருக்கியில் ஒரு பெண் இசைக்கலைஞர் 288 நாட்கள் பட்டிணிப் போராட்டத்திற்குப் பின்பு நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பேசினால் கூட பரவுமா??? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி!!!

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்துளிகள் மூலம் பரவலாம்”, எனவே எச்சரிக்கைக்காக மாஸ்க் அணிவது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.

''வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை'' உண்மை நிலவரம் என்ன???

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் அலறிக்கொண்டிருக்கும் போது ஒரு நாடு மட்டும் ஏவுகளை சோதனைகளை நிகழ்த்திக்கொண்டு மிகவும் அமைதியாக இருக்கிறது.