போல்ட் குயின்… நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Saturday,October 30 2021]

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான இவர் இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்ததோடு சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.

தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் கவனம் செலுத்திவரும் நடிகை ரித்திகா சிங், “ஆண்டவன்“, “சிவலிங்கா“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்தப் படங்கள் அவருக்கு பெரிய அளவிற்குக் கைக்கொடுக்காத நிலையில் கடந்த ஆண்டு வெளியான “ஓ மை கடவுளே“ திரைப்படம் ஹிட் அடித்தது. இதனால் மீண்டும் நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்றுவருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் “பாக்சர்“, விஜய்ஆண்டனி நடிப்பில் “கொலை“, “பிச்சைக்காரன்2“ நடிகர் அரவிந்த் சாமியுடன் “வணங்காமுடி“ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும் சமூகவலைத் தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை ரித்திகா தனது போட்டோ ஷுட் புகைப்படங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கிளாமர் உடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே பயங்கர ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு ஏராளாமான பாசிட்டிவ் கமெண்டுகளையும் குவித்து வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.