கள்ளம் கபடமில்லாத ஸ்மைல்: ஐஸூக்கு ஐஸ் வைத்த ரித்விகா

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருடன் சண்டை போட்டு எல்லோரையும் பகைத்து கொண்டவர் என்றால் அவர் ஐஸ்வர்யாதான். தன்னுடைய உயிருக்குயிரான தோழி யாஷிகாவிடம் கூட சிலசமயம் எரிந்து விழுவதை பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆரம்பம் முதலே ஐஸ்வர்யா இந்த செயல்களை குழந்தைத்தனமாக தெரியாமல் செய்கிறாரா? அல்லது இதுவும் ஒரு யுக்தியா? அல்லது எல்லோர் கவனமும் தன்மீது இருக்க வேண்டும் என்பதற்காக நாடகமாடுகிறாரா? என்பதே புரியவில்லை

இந்த நிலையில் ஐஸ்வர்யாவிடாமும் ஒருசில பாசிட்டிவ்கள் இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இதுகுறித்து ரித்விகா இன்று கூறியபோது, 'ஐஸ்வர்யாவிடம் தனக்கு பிடித்தது அவருடைய கள்ளங்கபடம் இல்லாத புன்னகை என்றும், இந்த வீட்டிலேயே எல்லோருடைய புன்னகையைவிட அவருடைய புன்னகை மட்டுமே சிறப்பானது என்றும் கூறுகிறார்.

அதேபோல் ரித்விகா இந்த வீட்டில் ஆரம்பம் முதல் நியாயமாக விளையாடி வருவதாகவும் யாருக்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ அவர் செயல்படவில்லை என்றும் யாஷிகா கூறுகிறார்.

மேலும் விஜயலட்சுமி கூறியபோது, 'ஒரு தமிழ்ப்பெண் அமைதியாக இருப்பது நல்ல விஷயம் தான், ஆனால் அதே நேரத்தில் போட்டி என்று வரும்போது தனது முழு திறமையையும் அவர் பயன்படுத்தவில்லை என்று தோன்றுவதாக ரித்விகாவை கூறுகிறார்.

கடந்த புரமோவில் சிண்டுமுடிந்த பிக்பாஸ் இந்த புரமோவில் சக போட்டியாளர்களை நல்லவிதமாக கூற வைத்துள்ளது ஒரு சிறிய ஆறுதல்