ஐஸ்வர்யா வெளியேறாதது வியப்பை அளித்தது: ரித்விகா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா வெளியேறுவார் என நாங்கள் அனைவரும் நினைத்தபோது திடீரென சென்றாயன் வெளியேறியது எங்களுக்கு வியப்பை அளித்தது என கூறியுள்ளார்.
11வது வாரத்தில் ஐஸ்வர்யாதான் வெளியேறுவார் என நாங்கள் அனைவரும் நினைத்தோம். ஆனால் அந்த வாரம் சென்றாயன் வெளியேறியது எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. பார்வையாளர்களுக்கு ஐஸ்வர்யா, யுக்தியுடன் டாஸ்க் செய்ததில் விருப்பமில்லை. இருப்பினும் சென்றாயனை பலருக்கும் பிடித்திருந்தாலும் அது ஓட்டுகளாக மாறவில்லை. பலருக்கும் ஓட்டு போடுவதின் முக்கியத்துவம் தெரியவில்லை. அப்போது தான் கமல் சார் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டு போடுமாறு பார்வையாளர்களை கேட்டுக் கொண்டார்.
மேலும் ஐஸ்வர்யா டாஸ்குகளை ரிஸ்க் எடுத்து செய்தார். கடந்த சீசனில் போட்டியாளர்கள் டாஸ்க் செய்யும்போது யுக்தியை கடைபிடிக்கவில்லை. ஆனால் இந்த முறை ஒருசிலர் ஜெயிப்பதற்காக யுக்தியை கையாண்டனர். நான் டாஸ்குகளை விதிமுறையின்படி நேர்மையாகவே செய்தேன். என் நேர்மைக்கு கிடைத்த பரிசுதான் பிக்பாஸ் டைட்டில்' என்று ரித்விகா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com