இந்த நேரத்தில் பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல: ரித்விகா
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா குறித்த விழிப்புணர்வை கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை ரித்விகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மருந்து கடைகளிலும் மாஸ்க் மற்றும் கொரோனா சம்பந்தப்பட்ட மருந்து பொருட்களை அதிக விலைக்கு விற்கக்கூடாது. ஒரு சிலர் ஐந்து ரூபாய் மாஸ்க்கை 50 ரூபாய்க்கு விற்கின்றனர். நானே ஒரு மருந்துக்கடையில் மாஸ்க் வாங்க சென்றபோது அதிக விலை சொன்னார்கள். ஏன் இவ்வளவு விலை என்று கேட்டதற்கு இந்த விலைக்குத்தான் தற்போது விற்று வருகிறோம் என்று சொன்னார்கள்.
எனவே அனைவருக்கும் மாஸ்களை சலுகை விலையில் தர வேண்டும். முடிந்தால் இலவசமாக தர வேண்டும். இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு பார்க்கவேண்டாம். கொரோனாவுடன் நாம் அனைவரும் போரிட்டு வெல்வோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும். முக்கியமாக அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என்று ரித்விகா கூறியுள்ளார்.
Actress @Riythvika Mam Advices Everyone to Save
— Priya - PRO (@PRO_Priya) March 21, 2020
Water While Wash your Hands. #SaveWater #Covid19India
#SavefromCorona@spp_media pic.twitter.com/GFatFlOFyk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments