எல்லா வசதி இருந்தும் ஏன் வீட்ல இருக்க மாட்டேங்குறீங்க: ரித்விகா
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகை ரித்விகா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
இன்று முதல் 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இன்னும் மக்கள் தெருக்களில் நடந்து கொண்டும் வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர். இதன் சீரியஸ்னஸ் என்னவென்று இன்னும் பலருக்கும் புரியவில்லை. எங்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது என்று சிலர் அசட்டு தைரியத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்காக இந்த வீடியோ.
தயவுசெய்து நீங்கள் வீட்டிலே இருக்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் இருப்பதால் உங்கள் வீட்டில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு. 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் ஒரு லட்சம் பேர்களை மட்டுமே தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இந்த வைரஸ் அட்டாக் செய்தவர்களை தனி அறையில் வைத்து மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். நீங்கள் வெளியே போய் கொரோனா வைரஸை பரப்பினால் எத்தனை பேரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க முடியும். எனவே தான் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் சீரியஸை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் வெள்ளம் வந்தபோது 10 முதல் 15 நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அப்போது மின்சாரம் இல்லை, போன் இல்லை, செல்போன் இல்லை, யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது. ஆனால் தற்போது அப்படியில்லை. மின்சாரம் இருக்கிறது, டிவி இருக்கின்றது செல்போன் இருக்கின்றது, அனைத்து பொழுதுபோக்கும் இருக்கின்றது. எல்லா வசதிகளும் இருக்கும் போது ஏன் வீடுகளில் இருக்காமல் வெளியே சுற்றுகிறார்கள்? நீங்கள் வீட்டில் இருப்பதால் உங்கள் வீட்டு பெரியவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பு. எனவே தயவு செய்து அனைவரும் வீட்டில் இருங்கள்’ என்று நடிகை ரித்விகா கூறியுள்ளார்.
Actress #Riythvika advises about Self-Quarantine and the Importance People Should have to follow
— Jaya TV (@JayaTvOfficial) March 25, 2020
Stay home be Safe To Fight Against #COVID19#IndiaFightsCorona @Riythvika@PRO_Priya @spp_media pic.twitter.com/sbG7AkUSnE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com