விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' டைட்டில் வின்னர்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர் ஒன்றை இன்று இயக்குனர் பா ரஞ்சித் அறிவிக்க இருப்பதாக நேற்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்
அதன்படி இந்த படத்தில் ’பிக்பாஸ் 2’ டைட்டில் வின்னர் ரித்விகா இணைந்துள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வரும் நிலையில் தற்போது ரித்விகாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வெங்கடகிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் மேகாஆகாஷ், விவேக், மோகன் ராஜா உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Happy to welcome onboard @Riythvika for MakkalSelvan @VijaySethuOffl ‘s #YaadhumOoreYaavarumKelir.@ChandaraaArts @cineinnovations @roghanth @akash_megha @Actor_Vivek @jayam_mohanraja @nivaskprasanna @raguadityaa @designpoint001 @rkajay94 @onlynikil @CtcMediaboy pic.twitter.com/6FoxsmePjr
— pa.ranjith (@beemji) February 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com