மகத்தின் சுயரூபத்தை தோலுரித்த ரித்விகா-ஜனனி: அதிர்ச்சியில் யாஷிகா
- IndiaGlitz, [Saturday,August 25 2018]
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மகத்தின் செயல்பாடுகள் பார்வையாளர்களுக்கு எரிச்சலை தந்து கொண்டிருந்தது. குறிப்பாக யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மகத்துடன் நெருங்கி பழகிய பின்னர் மகத்தின் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. யாஷிகா, ஐஸ்வர்யா தவிர அனைவருடன் மோதல் போக்கை கடைபிடித்தார் மகத்
இந்த நிலையில் இன்று ஆடியன்ஸ்கள் வற்புறுத்தலால் வேறு வழியின்றி மகத்தை கண்டிக்கும் நிலைக்கு கமல் தள்ளப்பட்டார். இன்று நிச்சயம் தாளித்துவிடுகிறேன் என்று சொன்ன கமல், சுமாராக தாளிக்கவும் செய்தார்
இந்த நிலையில் மகத்தின் உண்மையான சுயரூபத்தை கமலிடம் ரித்விகா மற்றும் ஜனனி தோலுரித்தனர். மகத்தின் உண்மையான கேரக்டர் இதுவே இல்லை. மற்றவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்தததால்தான் மகத் நம் கண்ணுக்கு கெட்டவனாக தெரிகிறார். உண்மையான நல்லவனான மகத் இங்கே பிரதிபலிக்கவே இல்லை. காதல் அவர் கண்ணை மறைத்துவிட்டது என்று கூறுகின்றனர். இதனைக் கேட்டு யாஷிகா அதிர்ச்சி அடைவதோடு சற்றுமுன் வெளியான புரமோ வீடியோ முடிகிறது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று முதல்முறையாக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/03KUeQAVks
— Vijay Television (@vijaytelevision) August 25, 2018