பிக்பாஸ் வெற்றிக்கு பின் பிரபலத்தை சந்தித்த ரித்விகா


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாருமே எதிர்பாராத வகையில் ரித்விகா டைட்டில் பட்டம் வென்றார். ஆரம்பத்தில் சில வாரங்கள் மட்டுமே தாக்கு பிடிப்பார் என்று கருதப்பட்ட ரித்விகா, பின்னர் மக்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து ஒரு கட்டத்தில் அசைக்க முடியாத இடத்தை பெற்றார். இரண்டு வாரங்களுக்கு முன்னரே ரித்விகா தான் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்தபடியே பிக்பாஸ் டைட்டிலை பெற்றார் ரித்விகா
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகத், சென்றாயன் ஆகியோர் சிம்புவை சந்தித்த நிலையில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர்களும் சிம்புவை சந்தித்துள்ளனர். சிம்புவுடன் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, மகத் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யாதான் ஹீரோயின் என சென்றாயன் கூறியிருந்த நிலையில் இன்று சிம்புவை ஐஸ்வர்யா சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments