பாலாஜியை அடுத்து ரித்விகா மீது குப்பை கொட்டும் போட்டியாளர்கள்

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராணி மகாராணி டாஸ்க்கின்போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டிய விவகாரம் இன்றளவும் ஒரு வாதமாக பேசப்பட்டு வருகிறது. கடும் கோபக்காரரான பாலாஜி, ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது அமைதியாக இருந்தது ஆச்சரியம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவை ஏன் யாரும் தடுக்கவில்லை என நித்யா சமீபத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் குப்பை கொட்டுதல் உள்பட ஒருசில சம்பவங்களை போட்டியாளர்கள் நடித்து காட்டுகின்றனர். அதில் ரித்விகா, பாலாஜி போல் நடிக்க அவர் மீது மற்றவர்கள் போட்டி போட்டு குப்பையை கொட்டுகின்றனர். அதேபோல் மும்தாஜ் போல் விஜயலட்சுமி நடிக்க ஐஸ்வர்யா, ரித்விகா போல் நடிக்கும் ஒரு காட்சியும் நடித்து காட்டப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ரித்விகாவிற்கு 77 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளும், ஐஸ்வர்யாவுக்கு 43 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளும் கிடைத்துள்ளது. விஜயலட்சுமிக்கு சுமார் 22 லட்சமும், ஜனனிக்கு சுமார் 19 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளது.