அருண்விஜய்யின் 'பாக்சர்' படத்தில் நாயாகியான பாக்ஸர் வீராங்கனை

  • IndiaGlitz, [Monday,February 11 2019]

நடிகர் அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அருண்விஜய் தற்போது 'அக்னி சிறகுகள்', 'சாஹோ', மற்றும் 'பாக்சர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது 'பாக்சர்' படத்தின் நாயகி குறித்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கவுள்ளார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ரித்திகாசிங் நிஜ பாக்சர் வீராங்கனை என்பதும் இதற்கு முன்னரே அவர் 'இறுதிச்சுற்று' என்ற பாக்சர் கதையில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருண்விஜய் இந்த படத்தில் பாக்ஸாராக நடித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் ரித்திகாவுக்கும் பாக்ஸர் கேரக்டரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அறிமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் லியோன் இசையில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் பாலசந்தர் கலை இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தை மதியழகன் தயாரிக்கவுள்ளார்.