பால் உணவுகளை உட்கொள்வதால் வரும் ஆபத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதர்கள் தனது ஆரம்ப கால வாழ்க்கை முறையில் மற்ற இனத்தின் (விலங்கு, எருமை, மாடு, ஆடு) பால் உணவுப்பொருட்களைச் சாப்பிடவில்லை. தங்களது தேவைகளுக்காக மற்ற விலங்கினங்களை வளர்க்க ஆரம்பித்த நாட்களில்தான் முதல் முதலில் மற்ற விலங்கினங்களின் பாலைக் குடித்திருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குப் பின்னர் ஐரோப்பிய விவசாயிகள் முதன் முதலில் மாட்டின் பாலை உட்கொண்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
தற்போது வேறு ஒரு இனத்தின் பால் உணவுகளை உட்கொள்வதால், மனித உடலில் பாதிப்புகள் வருமா என்பதனைக் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
விலங்கின் பாலில் லாக்டோஸ் எனப்படும் ஒருவகை சர்க்கரை உள்ளது. இந்தச் சர்க்கரை நாம் உட்கொள்ளும் பழம் மற்றும் பிற இனிப்பு வகைகளிலிருந்து மாறுபட்ட ஒன்றாகும். குழந்தைப் பருவத்தில் தாயின் பாலை அருந்துகிறோம். தாய்ப் பாலிலும் லாக்டோஸ் காணப்படுகிறது. தாய்ப்பாலிலுள்ள லாக்டோஸை ஜீரணிப்பதற்காக, இயற்கையாகவே குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட வயது வரைக்கும் லாக்டோஸ் என்ற சிறப்பு நொதிப்பொருள் சுரக்கின்றன. இந்த நொதிப்பொருளானது குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பாலினை ஜீரணம் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
குழந்தைப் பருவம் முடிந்த பின்பு மனித உடலில் லாக்டோஸ் நொதிப் பொருள் சுரப்பதில்லை. லாக்டோஸ் நொதிப்பொருள் இல்லாமல் நாம் உட்கொள்ளும் பால் உணவுகளை நம்மால் ஜீரணம் செய்ய முடிவதில்லை. ஆனாலும் தொடர்ந்து மனித இனம் பால் பொருட்களைப் பல்வேறு விதங்களில் உட்கொண்டுதான் வருகிறது.
பால் பொருட்களை ஏற்றுக்குகொள்ளும் பக்குவம் மனித உடலுக்குத் திடீரென்று வந்துவிடவில்லை. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனித இனம் தொடர்ந்து பால் பொருட்களைச் சாப்பிட்டு வந்ததால் மனித உடல் ஒரு வகையான ஏற்புத் தன்மையினை பெற்றிருக்கிறது. உலகில் அனைத்து இன மக்களும் பால் உணவுப் பொருட்களை ஏற்றுக் கொள்வதற்கான உடல் நிலைப்புத் தன்மையினைப் பெற்றிருக்கவில்லை. ஏனென்றால் அனைத்து இன மக்களும் பால் பொருட்களை ஆரம்பத்திலிருந்து உட்கொள்ளவில்லை. வரலாற்றில் பல இன மக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் பால் உணவுகளைத் தொடர்ந்து தவிர்த்தும் வந்திருக்கின்றனர்.
பால் பொருட்களால் வரும் ஆபத்துகள்
சில நேரங்களில் அதிகமான பாலினைக் குடிப்பதால் வயதானவர்களுக்கு ஜீரணக்கோளாறு, வாயுக்கோளாறு, தசைப் பிடிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதேபோல் பால் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்த இனத்தவர்களுக்கும் பல நேரங்களில் உடல் நலக்குறைவு ஏற்படுகின்றன. ஏனெனில் லாக்டோஸ் ஏற்புத் தன்மை தற்போது பல இனங்களில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லாக்டோஸ் ஏற்புத் தன்மையானது உடலில் குறைகிற போது பால் உணவுப் பொருட்கள் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த ஒவ்வாமைக்கு மூலக் காரணங்களைத் தேடிய மருத்துவர்கள் பால் உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுரை கூறுகின்றனர்.
பால் உணவினை உட்கொள்வதற்கான காரணங்கள்
கொழுப்பு, புரதம், சர்க்கரை , கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பாலினைச் சத்தான உணவு முறையாகக் கருதுகிறோம். நாம் உண்ணும் உணவினை விட அதிக ஊட்டச்சத்தினைப் பெற பெரும்பாலும் பாலினை இணை உணவாக எடுத்துக் கொள்கிறோம்.
உலகளவில் பால் உற்பத்தி உயர்ந்துகொண்டே வருகிறது. தொழில் மயமான சமூகங்களில் பால் தவிர்க்க முடியாத ஒரு உணவாக மாறியுள்ளது. இந்நிலையில் விலங்கினத்தின் பாலைவிட தற்போது மாற்று தேடலில் வணிக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதன் விளைவால் பாதம், சோயா போன்ற தாவர இனங்களிலிருந்து, பதப்படுத்தப்பட்ட பால் உணவுப்பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. இத்தகைய தாயாரிப்புகள் இளம் தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமாகியுள்ளது எனலாம். சைவ உணவு பிரியர்கள் இத்தகைய மாற்று பால் உணவுப்பொருட்களை மிகவும் விரும்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாற்றுத் தேடல்களில் காணப்படுகின்ற குறைப்பாடுகளையும் தற்போது சமூக ஆர்வலர்கள் எடுத்துக் கூறிவருகின்றனர். ஏனெனில் சோயா போன்ற தாவரத்தின் பால் உணவுகளும் உடலுக்குக் கெடுதலை விளைவிக்கிறது என்று மருத்துவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
காலங்காலமாக அத்யாவசிய உணவாகக் உட்கொண்டு வரும் பால் உணவுகள் மனித உடலுக்கு ஏற்றவை இல்லை எனத் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொமையை உணரும் தருவாயில் இதனைக் குறித்து விழிப்புணர்வு கொண்டு தவிர்ப்பதால், முதிய வயதில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பால் உணவுகளுக்குப் பதிலாக உடல் ஏற்றுக்கொள்ளும் இயற்கை உணவுகளை நாடுவதே நலம் பயக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments