சென்னையுடன் உங்கள் அன்பு தொடர்வதில் மகிழ்ச்சி: தோனி குறித்து கமல் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனி அவர்கள் நேற்று மாலை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததில் இருந்து சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பித்து வருகிறது என்பதும், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தோனியின் பெருமை குறித்த பதிவுகளை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திறமை எங்கேயிருந்தாலும் அதற்கு மதிப்பு தரும் முதல் நபராக இருந்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தோனியின் ஓய்வு குறித்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து அவர் விளையாடுவதும் குறித்தும் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அவர் அந்த டுவிட்டில் கூறியிருப்பதாவது.
விளையாட்டு மட்டுமின்றி வாழ்க்கையிலும் தன்னம்பிக்கை எவ்வாறு வெற்றிக்கு அடைய உதவும் என்பதை நிரூபித்த உங்களுக்கு நன்றி. ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்துள்ளீர்கள். உங்களது கணிப்புகளுடன் கூடிய ரிஸ்க், அமைதியாக எடுத்த சரியான முடிவுகளை இனி இந்திய அணி தவறவிடும். இருப்பினும் சென்னையுடன் உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு தல தோனி ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Dear @msdhoni Thank you for demonstrating how self-belief can help achieve in sports and life. Rising from a small town to being the hero of the nation, your calculated risks and calm demeanour will be missed by Team India. Glad that your love story with Chennai continues.
— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments