அதிகரிகக்கும் கொரோனா… கோவில் வழிபாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

  • IndiaGlitz, [Wednesday,August 04 2021]

கொரோனா பரவல் அதிகரித்து இருக்கும் சில மாவட்டங்களில் தற்போது கோவில் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான முடிவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்டறிந்து அங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் தற்போது மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறப்பதற்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து அம்மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டு உள்ளார். மேலும் விலங்குகள் பலியிடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், திருவிழாக்கள் தேரோட்டம் நடத்துதல், ஜெபகூட்டங்கள் தொழுகைகள், கூட்டுப் பிரார்த்தனைகள், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல ராமேஸ்வரம் மாவட்டத்தில் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்குள்ள கடற்கரைகளில் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்து ஆடி மாத திருவிழா நாட்களில் இராமநாதபுரம், பரமக்குடி இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள வணிக நிறுவனங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

இதைத்தவிர வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவதற்கு தடைவிதித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

More News

தனுஷின் அடுத்த படத்தில் பழம்பெரும் இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்து வரும் 43வது திரைப்படமான 'மாறன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விரைவில் அவரது 44-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது 

எளிதில் உடல்எடையை குறைக்கும் ஆண்கள்… பெண்களால் ஏன் முடிவதில்லை? 

உடல்பருமன் என்பது இன்றையக் காலக்கட்டத்தைப் பொறுத்த வரைக்கும் பெரும் சிக்கலாக உருவெடுத்து இருக்கிறது.

2021ல் டிகிரி முடித்திருந்தால் வேலை கிடையாதா? அதிர்ச்சி தகவல்

2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என தனியார் வங்கி ஒன்றின் வேலை வாய்ப்பு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறையிசையில் பட்டையை கிளப்பிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, தற்போது ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது தெரிந்ததே.

விஜய்யை அடுத்து தனுஷ்: கார் வரி வழக்கு விசாரணை!

தளபதி விஜய் வாங்கிய வெளிநாட்டு காரின் நுழைவு வரி குறித்த வழக்கு கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.