ரிஷிகபூரின் இறுதி சடங்கிற்காக 1400 கிமீ பயணம் செய்யும் மகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமான பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் இறுதிசடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது மகள் டெல்லியில் இருந்து மும்பைக்கு 1,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பழம்பெரும் நடிகர் ரிஷிகபூரின் மகள் ரித்திமா, தொழிலதிபர் ஒருவரை மணந்து டெல்லியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விமானத்தில் பயணம் செய்த அவர் மத்திய அரசிடம் அனுமதி கேட்டதாக தெரிகிறது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் ரிஷிகபூரின் மகளுக்கு மட்டும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் தனது உறவினர் 5 பேர்களுடன் மும்பைக்கு செல்ல வேண்டியிருப்பதாக கூறியதை அடுத்து அவருக்கு சாலை வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரிஷிகபூரின் மகள் தனது உறவினர்களுடன் 1400 கிலோ மீட்டர் டெல்லியில் இருந்து மும்பைக்கு கார் மூலம் பயணம் செய்து வருகிறார். அவர் சுமார் 18 மணி நேரம் பயணம் செய்வார் என்றும் இன்று இரவு அவர் மும்பையை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 18 மணி நேரம் பயணம் செய்யும் ரிஷிகபூரின் மகள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments