'காந்தாரா சேப்டர் 1' மிரட்டலான டீசர் வீடியோ.. ரிஷப் ஷெட்டியின் அடுத்த அவதாரம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ’காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 16 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் 450 கோடி ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ’காந்தாரா’ படத்தின் கதைக்கு முந்தைய கதையம்சம் கொண்ட ’காந்தாரா சேப்டர் 1’ படம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த டீசரை பார்க்கும்போதே மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீண்ட தாடி மற்றும் கட்டுமஸ்தான உடலுடன் ரிஷப் ஷெட்டி இந்த டீசரில் காட்சி அளிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’காந்தாரா சேப்டர் 1’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Step into the land of the divine 🔥
— Hombale Films (@hombalefilms) November 27, 2023
Presenting #KantaraChapter1 First Look & #Kantara1Teaser in 7 languages❤️🔥
▶️ https://t.co/GFZnkCg4BZ#Kantara1FirstLook #Kantara @shetty_rishab @VKiragandur @hombalefilms @HombaleGroup @AJANEESHB @Banglan16034849 @KantaraFilm pic.twitter.com/2GmVyrdLFK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments