'காந்தாரா சேப்டர் 1' மிரட்டலான டீசர் வீடியோ.. ரிஷப் ஷெட்டியின் அடுத்த அவதாரம்..!

  • IndiaGlitz, [Monday,November 27 2023]

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ’காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 16 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் 450 கோடி ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’காந்தாரா’ படத்தின் கதைக்கு முந்தைய கதையம்சம் கொண்ட ’காந்தாரா சேப்டர் 1’ படம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த டீசரை பார்க்கும்போதே மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீண்ட தாடி மற்றும் கட்டுமஸ்தான உடலுடன் ரிஷப் ஷெட்டி இந்த டீசரில் காட்சி அளிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’காந்தாரா சேப்டர் 1’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 68' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டில் தான்.. உறுதி செய்த அர்ச்சனா கல்பாத்தி?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவல் கசிந்து உள்ளது

என் மகளை காப்பாற்றுங்கள்; பிரதீப் இடம் பேசிய ஐஷுவின் அப்பா..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட பிரதீப் குறித்து இன்னும் போட்டியாளர்களும் சரி பார்வையாளர்களும் சரி பேசிக்

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் அனல் அரசு: பீனிக்ஸ் பட தொடக்கவிழா..!

சண்டைப் பயிற்சி இயக்குனர் அனல் அரசு பீனிக்ஸ் (வீழான்) திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்

ஒண்ணு நான் இருக்கணும், இல்லேன்னா பூர்ணிமா இருக்கணும்.. நேரடியாக நாமினேட் செய்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடக்கும். போட்டியாளர்கள் கன்ஃபக்சன் அறைக்கு சென்று இரண்டு சக போட்டியாளர்களை நாமினேட் செய்வார்கள்.

அடிப்படை மனித குணம் கூட இல்லாதவர்: சீனுராமசாமியின் குற்றச்சாட்டுக்கு மனிஷா யாதவ் பதிலடி..

இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் மனிஷா யாதவ் பிரச்சனை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சீனு ராமசாமியின் குற்றச்சாட்டுக்கு மனிஷா யாதவ் பதிலளித்துள்ளார்.