உத்தரகண்ட் பனிச்சரிவு விபத்து- தன் சம்பளத்தை நிவாரணமாகக் கொடுக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்து வரும் ரிஷப் பண்ட் நேற்று உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்து தனக்கு பெரும் வலியை கொடுத்தாகத் தெரிவித்து உள்ளார். மேலும் இந்தச் சம்பவத்துக்கு நிவாரணமாக என் போட்டிச் சம்பளத்தைக் அளிக்க உள்ளேன் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவினால் தாலிங்கா, அலெக் நந்தா எனும் இரு ஆறுகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கின்போது அப்பகுதியில் புதிய நீர்மின் திட்டத்தில் பணியாற்றி வந்த 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் சிக்கிய 14 பேர் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 170 தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்நிலையில் உத்தரகண்ட் பனிச்சரிவு விபத்தும் அதன் உயிரிழப்புகளும் பெரிய வலியை ஏற்படுத்தி இருப்பதாக முன்னணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். மேலும், “உத்தரகண்டில் இந்த சேதமும் உயிரிழப்புகளும் என்னை வலியில் அழ்த்துகின்றன. மீட்புக் பணிகளுக்காக என் போட்டி சம்பளத்தை கொடுக்க விரும்புகிறேன். மக்களும் இதற்கு முன்வர வேண்டும்” என்று தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பாட்டியில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குறித்து இருக்கிறது. அவர்களுக்கு எதிராக களம் இறங்கி இருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் நேற்று வரை 6 விக்கெட்டுகளை இழந்து 74 ஓவர்களில் 257 ரன்களை குவித்து உள்ளனர். இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி கடுமையாகப் போராடி வருகிறது. இந்தப் போட்டியின் போது முன்னணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் 91 ரன்களை எடுத்து அணிக்கு பக்க பலமாக இருந்தார். தற்போது உத்தரகண்ட் பனிச்சரிவு விபத்துக்கு தன்னடைய சம்பளத்தை கொடுக்க முன்வந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Deeply pained by the loss of life in Uttarakhand. Would like to donate my match fee for the rescue efforts and would urge more people to help out.

— Rishabh Pant (@RishabhPant17) February 7, 2021