தல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரிஸ்பனில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. இன்னமும் 22-23 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிபெற 134 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய வீரர்கள் களத்தில் அதிரடி காட்டி வருகின்றனர்.
ரஹானே 22 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸ் என ஆக்ரோஷமாக விளையாடினார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் பெய்ன் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது தேவையில்லாத ஷாட் எனப் பலரும் விமர்சனம் செய்தனர். அடுத்து வந்த ரிஷப் பந்த் 10 ரன்கள் எடுத்து தற்போது களத்தில் விளையாடி வருகிறார். புஜாரா 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் ரிஷப் பந்த் 2 ரன்களை எடுத்தப்போது 1,000 டெஸ்ட் ரன்களை அதிவேகமாக எடுத்த வீரர் என்ற சாதனை நிகழ்த்தினார். இச்சாதனை தல தோனியின் அதிவேக சாதனையை முறியடித்து இருக்கிறது. இதனால் பலரும் ரிஷப் பந்திக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தோனிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை எடுக்க 32 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. ஆனால் ரிஷப் பந்த் 27 இன்னிங்ஸ்களில் சாதித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல பரூக் இஞ்சினியர் 36 இன்னிங்ஸ், கிரண் மோரே 50, நயன் மோங்கியா 39, சையத் கிர்மானி 45 ஆகிய விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் 1,000 ரன்களை எடுத்து உள்ளனர். ஆனால் டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை அதிவேகமாக எடுத்த குவிண்டன் டி காக் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறார். தல தோனியின் இன்னிங்ஸ்களை விட குறைவான இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை எடுத்து ரிஷப் பந்த் தற்போது சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments