பிரபல நடிகையை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்த ரிஷப் பண்ட்… என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும் முன்னணி பேட்ஸ்மேனாகவும் இருந்துவரும் ரிஷப் பண்ட் பிரபல நடிகை ஒருவரை தன்னுடைய வாட்ச் அப் சேட்டில் பிளாக் செய்து வைத்திருப்பதாக சோஷியல் மீடியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பாலிவுட்டில் B-Town பியூட்டி என அழைக்கப்படும் நடிகை ஊர்வசி ரவுடாலாவை தனது வாட்ஸ் அப் சேட்டில் பிளாக் செய்துவிட்டார் என்று தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் ரிஷப் பண்டின் முன்னாள் தோழியான நடிகை ஊர்வசியை அவர் ஏன் பிளாக் செய்ய வேண்டும் என்பது போன்று ரசிகர்கள் சிலர் அலசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சினிமாவிற்கும் கிரிக்கெட் வட்டாரத்திற்கும் எப்போதும் ஒரு நெருக்கமான தொடர்பு இருந்துகொண்டே வருகிறது. அந்த வகையில் நடிகை அனுஷ்கா சர்மா, கீதா பாஸ்ரா, சானிகா காட்கே போன்றோர் பிரபல கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்துகொண்டுள்ளனர். அந்த வரிசையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஊர்வசி ரவுடாலா மற்றும் ரிஷப் பண்ட்டை இணைத்து சில தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதற்கு மாறாக கடந்த 2019 இல் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடருக்குப் பின்னர் ரிஷப் பண்ட் தன்னுடைய காதலி இவர்தான் என்று ஒருபுகைப்படத்துடன் இஷா நெகி என்பவரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி வைத்தார். அதேபோல இஷா நெகியும் ரிஷப் பண்டின் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இப்படியிருக்கும்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை ஊர்வசி ரவுடாலா கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் இதனால் ஆனால் அந்த முனையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் நடிகை ரவுடாலாவின் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ஊர்வசி ரவுடாலா தமிழ் சினிமாவில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடித்துவரும் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழில் வெளியான “திருட்டு பயலே 2” திரைப்படத்தின் இந்தி ரீமேக் மற்றும் தெலுங்கு- இந்தி திரைப்படமான “பிளாக் ரோஸ்“ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.