அசுர வேகத்தில் தல தோனியின் சாதனையை முறியடித்த இளம் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் விக்கெட் கீப்பரின் பணி மிகவும் பலம் பொருந்தியது. அப்படியிருந்துகொண்டு அந்த வீரர் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பது உண்மையில் ஒரு அசாத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இந்தியக் கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேனாகவும் சிறந்த விக்கெட் கீப்பராகவும் அசத்திவந்த ஒருவர்தான் மகேந்திரச் சிங் தோனி.
தோனி ஹெலிகாப்டர் ஷாட் மற்றும் பேட்டிங்கில் அசத்துவதுபோலவே விக்கெட் கீப்பிங்கிலும் கிங்காக இருந்து வந்தார். அதனால்தான் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை டிஸ்மிசலை செய்து அவுட்டாக்கிய வீரர்களின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருக்கிறார். இதுவரை 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்ட தோனி 293 முறை டிஸ்மிசல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் டிஸ்மிசல் செய்து 100 விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் முதல் இடத்தில் இருந்துவருகிறார். இந்தச் சாதனையைத்தான் தற்போது 24 வயதான இளம் வீரர் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடிவரும் ரிஷப் பண்ட், தோனி 36 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை தற்போது 26 டெஸ்ட் போட்டிகளில் அவர் முறியடித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பண்டின் இந்தச் சாதனையைப் பார்த்து ரசிகர்கள் கடும் உற்சாகத்தை வெளிப்படுத்திவரும் அதேவேளையில் தல தோனியின் ஒருநாள் போட்டி சாதனையை இவரால் முறியடிக்க முடியுமா எனவும் சவால் விடுத்துவருகின்றனர். தோனி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 400 டிஸ்மிசல் விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.
24 வயதான ரிஷப் இதுவரை 50 ஒருநாள் விக்கெட்டுகளை கூட பெறவில்லை. இதனால் சர்வதேச அளவில் அனைத்துப் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராகவும் உருவெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு உற்சாகம் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com