இந்தியக் கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி விருது… குவியும் பாராட்டு!

ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கும் முடிவை ஐசிசி வெளியிட்டு இருந்தது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக ரிஷப் பந்த் தேர்வாகி உள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த வகையில் சிட்னியில் நடைபெற்ற 2 ஆவது இன்னிங்ஸில் 97 ரன்களும் பிரிஸ்பனில் நடைபெற்ற போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸில் 89 ரன்களும் எடுத்து இருந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பனில் வெற்றிக் கோப்பையை பெற முடிந்தது. இதன் அடிப்படையில் ரிஷப் பந்தின் பெயரை ஐசிசி விருதுக்கு தேர்ந்தெடுத்து இருக்கிறது.

அதேபோல இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 228 ரன்களும், 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 186 ரன்களும் எடுத்து இருந்தார். இதனால் இங்கிலாந்து 2-0 என இலங்கையை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்த முடிந்தது. அந்த அடிப்படையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் 2 ஆவது இடம் பெற்று உள்ளார்.

அடுத்து அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிரிலிங் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டியில் 3 சதம் விளாசினார். இதனால் அவரது பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இந்தப் பட்டியலில் சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானை சேர்ந்த டயானா பெய்க், தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், மரிஜானே ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்து உள்ளனர்.

இந்நிலையில் ரிஷப் பந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரக்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பனிச்சரிவு பொழிவிற்கு தன்னுடைய சம்பளத்தை நிவாரணமாக வழங்க முன்வந்துள்ளார். அதோடு இவர் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் அடுத்த ரூர்கி எனும் பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார்.

More News

'மாஸ்டர்' படத்தின் ஒருவருட கொண்டாட்டம்: வைரலாகும் ஹேஷ்டேக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில்

90 வயது நண்பரை இழந்துவிட்டேன்: கமல்ஹாசன் டுவீட்

உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் தன்னுடைய நெருங்கிய நண்பருமான ஜான் கிளாட் கேரியார்  என்பவரை இழந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவி தினகரனிடம் திடீரென போனில் பேசிய ரஜினிகாந்த்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் திடீரென பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அல்லாவின் மகிழ்ச்சிக்காக 6 வயது மகனை நரபலி கொடுத்தேன்… படித்த பெண் ஆசிரியரால் அதிர்ச்சி!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் படித்த கல்லூரி பேராசிரியர்களே தங்களுடைய 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

விஜே விஜய்யின் க்யூட் குடும்பம்: வைரல் புகைப்படங்கள்!

ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது தற்போது முன்னணி சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் விஜே விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்'