close
Choose your channels

யுவன்ஷங்கர் ராஜா பெயரை மிஸ்யூஸ் செய்தாரா நடிகர் ரியோ ராஜ்? வைரல் வீடியோ..!

Monday, July 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யுவன் சார் தான் சொன்னார் என்று நடிகர் ரியோ ராஜ் அவரது பெயரை மிஸ்யூஸ் செய்ததாக வெளியாகி உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகர் ரியோ ராஜ் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜோ’ நல்ல வெற்றி பெற்றது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக ரியோ ராஜ் நடிக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ’யுவன் சாரே சொல்லிட்டாரு’ என போஸ்டர் டிசைனர், கேமரா மேன், எடிட்டர் உட்பட அனைத்து டெக்னீசியிடம் சொல்லி வேலை வாங்கி புரமோ வீடியோ தயார் செய்துள்ளதாக ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். கடைசியாக யுவனிடம் சென்று உங்கள் பெயரை பயன்படுத்தி தான் எல்லோரையும் வேலை வாங்கினேன் என்று கூறிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் இந்த படத்திற்கு ’ஸ்வீட் ஹார்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, துளசி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்வினித் சுகுமார் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment