பிக்பாஸ் ரியோவுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி: என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியோ ராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தின் வீடியோ பாடல் ஒன்று ரிலீசாக உள்ளது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், இது ரியோவுக்கு மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த பாடல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் யூடியூபிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளில் உருவான இந்த பாடல் ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#PlanPanniPanna video song from #PlanPanniPannanum out TODAY! ????@thisisysr @rio_raj @nambessan_ramya @dirbadri @Arunrajakamaraj @Premgiamaren @positiveprint_ #PPP pic.twitter.com/KWeQtXux2g
— Sony Music South (@SonyMusicSouth) December 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments