டிக்கெட் டு ஃபினாலே இவருக்குத்தானா? மீண்டும் ஆரிக்கு ஏமாற்றம்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த நான்கு சுற்று போட்டிகளில் ரம்யா 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதனை அடுத்து ஷிவானி மற்றும் ரியோ ஆகிய இருவரும் 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஐந்தாம் சுற்று டாஸ்க் நடைபெறும் காட்சிகள் முதல் புரமோ வீடியோவில் உள்ளன. இதில் வளையத்தில் உள்ள பந்து கீழே விழாமல் சுற்ற வேண்டும் என்பதுதான் டாஸ்க். போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்க்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வழக்கம்போல ஆரி முதலாவதாக அவுட் ஆகி விடுகிறார். அவரை அடுத்து ரம்யா மற்றும் ஷிவானி அவுட் ஆகி விடுகிறார்கள் .

நான்காவதாக கேபியும், ஐந்தாவதாக சோம் அவுட் ஆக, ரியோ மற்றும் பாலாஜி தாக்குப்பிடித்து விளையாடுகின்றனர். இதில் ஆறாவதாக பாலாஜியும் அவுட்டாக ரியோ இந்த சுற்றில் முதலிடத்தை பிடித்து ஏழு புள்ளிகளை பெற்றுள்ளார். ஏற்கனவே அவர் 19 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

பாலாஜி அல்லது ரம்யா இரண்டாவது இடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஐந்து சுற்றுகளுடன் டாஸ்க் முடிவடைந்தால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு ரியோ தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை இன்னும் சுற்றுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை வரும் புரமோ வீடியோக்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.