வெளியே வந்தப்புறம் தான் தெரிஞ்சது: ரியோவின் மனம்திறந்த வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும், இதனை அடுத்து இரண்டாவது ரன்னராக ரியோவும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து வீட்டுக்கு சென்ற ரியோவுக்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் என்பதும் பட்டாசு மேளதாளங்கள் முழங்க அவரை வரவேற்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ரியோ தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் முதல் முறையாக வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: எல்லோருக்கும் வணக்கம்! நான் இப்போது ரொம்ப நன்றாக இருக்கிறேன். பிக்பாஸ் சீசன் 4 எனக்கு ஒரு அழகான நல்ல பயணமாக இருந்தது. அதை நான் வெளியில் வந்து பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். நீங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் அன்பை வெளியில் வந்து பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் எனது நன்றி
இனிமேல் நிறைய வேலை இருக்கிறது. அதை எல்லாவற்றையும் பிளான் பண்ணி பண்ணலாம். இந்த அளவுக்கு எனக்கு பாசிட்டிவிட்டி கொடுத்த உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி’ என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
#Rio First Ever Video After BiggBoss pic.twitter.com/meiqTybm1K
— shobana (@shobana40502466) January 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments