ரியோ-பவித்ராலட்சுமியின் ஆல்பம்: பிங் ரெக்காரட்ஸ் செய்த புதிய முயற்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனிஇசை ஆல்பத்திற்கு வரவேற்பு சமீப காலங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.
பல தளங்களில் இந்த ஆல்பங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். அந்த வழியில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கும் தளம் தான் 'பிங் ரெகார்டஸ்'.
பிங் ரெக்கார்ட்ஸின் முதல் பாடல் ஜூலை 26ஆம் தேதி வெளியானது. 'கண்ணம்மா என்னம்மா' என்ற தலைப்பை கொண்ட இந்த பாடல் பிங் ரெக்கார்ட்ஸின் யூடியூப் சேனல் மற்றும் அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது.
இந்த பாடலின் டீஸர் ஏற்கனேவ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசை அமைப்பாளர் தேவ் பிரகாஷ் இசையமைத்த இந்த பாடலை பிரிட்டோ ஜேபி இயக்கியுள்ளார். ரியோ ராஜ், பவித்ரா லட்சுமி, பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இப்பாடலை சாம் விஷால் பாடியதோடு சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் பாடல் வரிகளுக்கான காணொலி (லிரிக்கல் வீடியோ), ஒத்திசைக்கப்பட்ட லிரிக்கல் வீடியோ என்னும் புதிய முறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இசை உலகத்தில் தங்களின் தனித்துவமான பாணி மூலம் பெரிதும் பேசப்பட்டு வரும் 'நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்' உருவாக்கியுள்ள இந்தப் பாடலின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக பிங் ரெக்கார்ட்ஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
“நல்ல இசை மற்றும் பாடலை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருடனும் பணி புரிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எங்களின் கடின உழைப்பை ஒவ்வொரு படைப்பிற்கும் தந்து அதை மக்களிடம் சரியாக கொண்டு செல்வோம்,” என்று நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் தெரிவிக்கிறது.
மேலும் வருங்காலத்தில் பிங் ரெக்கார்ட்ஸ் சார்பாக இன்னும் நிறைய பாடல்கள் வெளியாக உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments