சுயஇன்பத்தால் மூளையில் ரத்தக்கசிவு? பகீர் ஏற்படுத்தும் உண்மைச் சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜப்பான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் பலமுறை சுயஇன்பம் அனுபவிப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இதனால் அவரது மூளையில் இரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டு தற்போது உயிரிழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஜப்பானில் வசித்து வந்த 51 வயதாகும் ஒருவர், தினமும் பலமுறை சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். இதனால் அவ்வபோது சிறு தலைவலி மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வுகள் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. திருமணம் ஆகாத அவர் முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் இதுகுறித்து தன்னுடைய நண்பர்களிடம் கலந்து பேசவும் தயங்கி இருக்கிறார்.
தலைவலி, வாந்தி, பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. ஆனாலும் சுயஇன்பப் பழக்கதை விடமுடியாமல் அவர் திணறி இருக்கிறார். அதோடு தனது பிரச்சனைக்கு காரணம் சுயஇன்பப் பழக்கம்தான் என்பதையும் உணர்ந்து இருக்கிறார். மேலும் இதுகுறித்து பேசத் தயங்கிய அவர் ஒருவழியாக Nagoya பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் இவரை பரிசோதித்து உள்ளனர்.
அப்போதுதான் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் சுயஇன்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் சிறிய அளவில் அந்த நபருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது.
நாளுக்கு நாள் அதிகரித்த இந்த நோய் பாதிப்பு ஒருகட்டத்தில் இருமும்போது மற்றும் கழிவறைக்குச் செல்லும்போதுகூட இரத்தக்கசிவு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து எச்சரித்த மருத்துவர்கள் அந்த நபருக்கு செரிப்ரோவேஸ்குலோர் (cerebrovascular Diseases) எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மூளையில் அடிக்கடி இரத்தக்கசிவு ஏற்படுவதால் உயிரைப் பறிக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இரண்டு வார சிகிச்சைக்குப் பின்பு தற்போது அந்த நபர் நல்ல உடல்நிலையுடன் வீடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com