சரியான மனம் எது? பஞ்சதந்திரக் கதைகள்… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்!
- IndiaGlitz, [Thursday,May 06 2021]
பஞ்சதந்திரக் கதைகள் என்று சொன்னாலே அதை குழந்தைகளுக்கானது எனப் பலரும் கருதுகின்றனர். உண்மையில் பஞ்சதந்திரக் கதைகளுக்குப் பின்னால் அரசியல் தந்திரம் ஒளிந்து இருக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விடுகிறோம். காரணம் இந்தக் கதையமைப்பானது எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக காகம், புலி, கரடி, சிங்கம் என்று விலங்கு மற்றும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த அமைப்பை வைத்து பஞ்சதந்திரக் கதைகளை குறைத்து எடைப்போட்டு விடமுடியாது.
இந்தக் கதைகளில் அரசியல் பின்னணி, சதித்திட்டம், பழங்கால அரசியல் முறைகளில் உள்ள குளறுபடிகள் என்பது போன்ற பல்வேறு சட்டவடிவங்கள் ஒளிந்து இருக்கின்றன. இந்த எளிமை அமைப்பு என்பது பின்னால் வந்த ஒன்று என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பஞ்சதந்திரக் கதைகளை விஷ்ணு சர்மா கி.பி.200 ஆம் நூற்றாண்டில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. அவர் எழுதும்போது சமஸ்கிருத மொழியில் அதுவும் ஸ்லோகமாக எழுதுகிறார்.
பின்னாட்களில் இந்தக் கதையமைப்பு எளிமைப் படுத்தப்படுகிறது. இந்த எளிமையில்தான் கதைகள் குழந்தைகளுக்கானது போல மாறுகிறது. இதனால் குழந்தைகளுக்கான மொழியில் மனித வாழ்வியலுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு கதைகளாக மாற்றிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கதைகளை குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை மிக எளிதாகவும் விரைவாகவும் உணர்ந்து கொள்ள முடியும். இதுபோன்ற பஞ்சதந்திரக் கதைகள் அனைத்தும் தற்போது vaarta ஆப்பில் அதுவும் எளிமையான ஆடியோ வடிவில் கொடுக்கப்பட்டு உள்ளது.
உங்களது நேரத்தை இனிமையாகவும் அதே நேரத்தில் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ள ஆடியோ வடிவில் கொடுக்கப்பட்டு இருக்கும் இந்தக் கதைகளை கேட்டு மகிழுங்கள். மேலும் பஞ்சதந்திரக் கதைகளுக்குப் பின்னால் ஒளிந்து இருக்கும் ரகசியத்தையும் கண்டுபிடிங்கள். உங்களது நேரத்தை இனிமையாக்க vaarta app.