ரூ.3 கோடி வரி பாக்கி… ஆட்டோ ஓட்டுநருக்கு வந்த நோட்டீஸால் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.3 கோடி வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திலுள்ள பகல்பூரில் வசித்து வருபவர் பிரதாப் சிங். இவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் ரூ.3,47,54,896 வரி நிலுவையில் இருப்பதாகவும் அந்த வரித்தொகையை உடனடியாகச் செலுத்தும்படியும் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.
இதையடுத்து அதிர்ந்துபோன பிரதாப் சிங் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த அதிகாரிகள் பிரதாப் சிங், பான் கார்டுக்கு விண்ணப்பித்தப்போது நகல் செய்யப்பட்ட அட்டையை அனுப்பி வைத்துவிட்டு உண்மையான கார்டை கொண்டு ஜிஎஸடி எண் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த மோசடி நபர், பிரதாப் சிங்கின் பான் கார்ட் மற்றும் ஜிஎஸ்டி எண்ணை வைத்து கடந்த ரூ.2018-2019 வாக்கில் ரூ.43,44,36,201 மதிப்பிலான வணிகத்தைச் செய்துள்ளார். அதற்கான வருமான வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதால் தற்போது பிரதாப் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதையடுத்து மோசடி நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout