வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பார்த்து ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களும் வியந்து போயினர். காரணம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான நடிகர் விஜய் நடித்த வாத்தி கம்மிங் பாடலுக்கு சிஎஸ்கே வீரர் பிராவோ கிரவுண்டிலேயே நடனம் ஆடி அசத்தினார். இதைப் பார்த்த மற்ற வீரர்கள் என்னடா நடக்குது என்கிற ரீதியில் குழம்பி போன சம்பவம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. இதனால் சிஎஸ்கே வீரர் தீபக் சஹாரின் பந்து வீச்சில் முன்னணி வீரர்களான கே.எல்.ராகுல் (5), மயங்க் அகர்வால் (0), தீபக் ஹுடா (10), நிக்கோலஸ் பூரண் (0), என அடுத்தடுத்த விக்கெட்டுகளில் சரிந்தனர். இந்நிலையில் கெயிலும் 10 ரன்களுக்கு அவுட்டானார். இந்நிலையில் 17 ஆவது ஓவரை வீசத் தொடங்கிய சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விக்கெட்டில் பஞ்சாப் அணி வீரர் முருகன் அஸ்வின் அவுட்டானார். அதுவும் மிட் ஆஃப் திசையில் அவர் அடித்த பந்தை டூப்ள்சிஸ் எளிதாகப் பிடித்து அவுட்டாக்கினார்.
இதனால் குளிர்ந்துபோன பிராவோ கிரவுண்டிலேயே வாத்தி கம்மிங் ஸ்டெப்பை போட்டு அசத்தினார். இதனால் மற்ற வீரர்கள் அவரைப் பார்த்து வியந்து போன சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ஒரு ஆண்டைக் கடந்தும் இன்றுவரை பலரையும் ரசிக்க வைத்து இருக்கிறது. அதிலும் கிரிக்கெட்டுக்கு மத்தியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவம் ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com