யாஷிகா அம்மாவை அடுத்து ரிச்சர்ட் ரிஷியும் விளக்கம்.. அந்த போட்டோ இதற்காகத்தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா? திருமணம் செய்யப் போகிறார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் யாஷிகாவின் அம்மா இதுகுறித்து விளக்கம் அளித்த போது ’இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்றும் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து ரிச்சர்ட் ரிஷி தற்போது விளக்கம் அளித்துள்ளார். ’நானும் யாஷிகாவும் ’சில நொடிகள்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறோம். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மற்றபடி அனைவரும் நினைப்பது போல் எனக்கும் யாஷிகாவுக்கும் காதல் எதுவும் கிடையாது’ என்று தெரிவித்தார்.
மேலும் நான் வெளியூரில் இருந்ததால் இந்த புகைப்படம் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க முடியவில்லை என்றும் படத்தின் புரோமோஷனுக்காக மட்டுமே அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments