உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்: சிம்பு-தனுஷ் நாயகியின் காரசாரமான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’மயக்கம் என்ன’ மற்றும் சிம்பு நடித்த ’ஒஸ்தி’ ஆகிய தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யா. இவர் தற்போது திரை உலகை விட்டு விலகி தனது கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரிச்சா மீண்டும் நடிக்க போவதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு ரிச்சா தனது பதிலை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது.
என்னுடைய ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பை விட்டு விலகிய என்னிடம் தொடர்ந்து ஒரு கற்பனையான உலகில் வாழ சொல்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் உண்மையான அக்கறை இல்லாமல் என்னுடைய படத்தைப் பற்றிப் பேசுவது, என்னுடைய புகைப்படங்களைப் பகிர்வது ஆகியவற்றை மட்டுமே செய்து வருகின்றனர். ஆனால் உங்கள் பொழுதுபோக்கு தேவைகளுக்காக என்னை பயன்படுத்த நீங்கள் ஆர்வமாக இருந்தால், என் எண்ணங்கள், மதிப்புகள் அல்லது எனது 5 வருட திரைப்பட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நபராக நான் யார் என்பதைப் பற்றி உண்மையில் நீங்கள் தெரிந்திருக்கவில்லை என்றால், உங்களுக்கு எந்த பயனும் இல்லை.
உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். 34 வயதான பெண்ணிடம் மரியாதையுடன் ஈடுபடுகிறவர்களுக்கு நான் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். அவளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சில ஞானத்தைப் பெற்றவள் மற்றும் பல முறை வாழ்க்கையை மாற்றியமைத்தவள், அவளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான தேடலில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்கு 34 ஆண்டுகளில் கிடைக்காதது வெறும் 5 வருடத்தில் மட்டும் கிடைத்த சினிமாவைக் கொண்டு வரையறுக்க முடியாது.
தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், என் வாழ்க்கை பயணத்தால் ஈர்க்கப்பட்டவர்களுக்கும் நன்றி. அவர்கள் தேவைகளுக்காக என்னை நாடுவோர்களை விட எனக்கென்று சில கருத்துக்கள் உள்ளன, எனக்கு மதிப்புகள் உள்ளன, அதுவே எனக்கு முக்கியம். ஆகவே, ஒரு சாதாரண நபராக நீங்கள் என்னை மதித்தால் மட்டுமே உங்களால் எனக்கு மகிழ்ச்சி”
இவ்வாறு நடிகை ரிச்சா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com