ATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தாக்கத்தால் வறுமையில் வாடிய நபர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்த இளைஞர் ஒருவர் ஹைத்ராபாத்தில் ஏடிஎம் அமைத்து அதன் மூலம் இலவச அரியை வழங்கிய சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எதற்கு இந்த ஏற்பாடு எனப் பதில் அளித்த அந்த இளைஞர் ஏடிஎம் என்பது பாரபட்சம் காட்டாது. யார் வேண்டுமானாலும் இதில் இருந்து இலவச அரியை எடுத்துச் செல்ல முடியும் எனத் தெரிவித்து இருக்கிறார்.
உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்து விட்டால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கைக்கு மாறிவிட வேண்டும் என்பதும்தான் நியாயம். அந்த அடிப்படையில் ஹைத்ராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி எனும் இளைஞர் அவரது இருப்பிடத்திற்கு அருகில் பல ஏடிஎம் களை அமைத்து அதன் மூலம் ஏழை மக்களுக்கு இலவச அரியை வழங்கியிருக்கிறார். இதற்காக அவர் 4 லட்சம் ரூபாய்க்கு அரிசியை கொள்முதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இளைஞரின் இத்திட்டத்தினால் கொரோனா நேரத்தில் வறுமையில் வாடிய 12 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்றதாகவும் தகவல் கூறப்படுகிறது. எம்பிஏ படித்த இந்த இளைஞர் தனது சொந்த செலவில் இந்த முயற்சியை மேற்கொண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர். இதனால் மேலும் கிடைத்த பணத்தை வைத்து காய்கறி, உணவுத் தானியங்கள் போன்றவற்றையும் இலவசமாக வழங்கி உதவியிருக்கிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கடுமையான விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்ட ராமு ஒருவேளை பிழைத்துக் கொண்டால் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்வேன் எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டாராம். இத்தகைய வேண்டுதல்கள் கூட சில நேரங்களில் பல நூறுக்கணக்கான வீடுகளில் அடுப்பெரிய காணரமாக இருக்கிறது எனப் பலரும் இளைஞருக்கு தற்போது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout