ரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,August 18 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவ்வபோது சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வரும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏற்கனவே கடந்த் ஏப்ரல் மாதம் ஒரு கருத்தை கூறி ரஜினி ரசிகர்களின் கண்டனத்தை பெற்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகிய Kotigobba 2 என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இந்த படம் தமிழிலும் 'முடிஞ்சா இவனை புடி' என்ற டைட்டிலில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்து ராம்கோபால்வர்மா தனது சமூக வலைத்தளத்தில் ' நான் சமீபத்தில் Kotigobba 2 படத்தை பார்த்தேன். இந்த படத்தில் உங்களுடைய நடிப்பை பார்த்தவுடன் உங்களுடைய பெயரை கிச்சா சுதீப் என்பதற்கு பதிலாக ரஜினி சுதீப் என்று மாற்றலாம் என்று எண்ணினேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு பதிவில், 'நீங்கள் ஒருநாள் கண்டிப்பாக 'எந்திரன்' போன்ற படத்தில் நடித்துவிடுவீர்கள். ஆனால் ரஜினியால் 'நான் ஈ' போன்ற படத்தில் நடிப்பது கனவிலும் நடக்காது' என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ரஜினியால் ஒரே மாதிரியான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்த முடியும். நீங்கள் ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்துக்கு சுதீப் பதிலளிக்கும் வகையில் கூறியபோது, 'நீங்கள் என்னுடைய படத்தை பாராட்டியதற்கு நன்றி. ஆனால் ரஜினிகாந்த் போன்ற மேதையுடன் தயவுசெய்து என்னை ஒப்பிட வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

More News

Mega hero debuts as singer. All cheers!

While actors usually take longer to debut as singers, Sirish has done it early on in his career.  The 'Anu Anu Cover Song' from 'Srirastu Subhamastu' is out and the actor comes across as a confident singer.

Here is all you are waiting to know about Karthi's 'Kaashmora'

The first look of Actor Karthi's mega budget flick 'Kaashmora' was released last night and the stills were enough to take the curiosity levels to huge heights. Here we bring you some more interesting information about the film, which will sure make the wait for Deepavali festival very long.

'Aankhen 2' will be thriller with loads of humour

Filmmaker Anees Bazmee says it is only because of megastar Amitabh Bachchan that he is making 'Aankhen 2'. "I think it is a tough job to make a good film... The reason behind making the film is Mr. Bachchan. I have worked with almost all actors but I still considered myself unlucky that I didn't get a chance to work with Amitji." Bazmee said at the announcement of the sequel.

'MS Dhoni-The Untold Story' to release in Marathi

Filmmaker Neeraj Pandey's upcoming biopic 'M.S. Dhoni - The Untold Story', which is set to be dubbed in Marathi, says he is excited with the local language release as the regional language film industry is booming.

Harshvardhan Kapoor - A semi stunt man

The dedication Harshvardhan Kapoor has given for 'Mirzya' is worth praising. But this hasn’t come handy for him; Harshvardhan has worked extremely hard for his debut movie.