நமது முதலமைச்சர் மகாத்மா காந்தி மாதிரி: பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,May 07 2019]

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் மகாத்மா காந்திக்கு சமமானவர் என்று பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி அவர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேல் அடிமைப்பட்டுக் கொண்டிருந்த நமது நாட்டை அஹிம்சை மூலம் சுதந்திர நாடாக்கினார். அதேபோல் அஹிம்சை வழியில் போராடி தெலுங்கானா என்ற மாநிலத்தை உருவாக்கியவர் சந்திரசேகரராவ்.

மகாத்மா காந்தியை தேசத்தந்தை என்று அழைப்போம் என்றால் சந்திரசேகர ராவ் அவர்களை தெலுங்கானாவின் தந்தை என்று அழைக்கலாம் என்று இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் சந்திரசேகரராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை விரைவில் இயக்குவேன் என்றும் ராம்கோபால்வர்மா தெரிவித்தார்.